சவாலுக்கான தெரிவு எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் 108 வது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பொகவந்தலா பெருந்தோட்ட கம்பனிக்குற்பட்ட லெதண்டி தோட்டத்தில் மகளிர் தின நிகழ்வு 08/03/2021 பிற்பகல் இடம்பெற்றது.
லெதண்டி குரூப் முகாமையாளர்
Z. இம்தியாஸ் தலைமையில் லெதண்டி கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் , மகளிர் தினம் வாழ்த்துரைகளும் இடம்பெற்றதுடன் கொவிட் 19 தொற்றின் சவால்களுக்கு மத்தியில் தொழில் புரியும் பெண் தொழிலாளர்களுக்கு முக்க்கவசங்களும் , சுகாதார பாதுகாப்பு உபகரணமும் வழங்கி வைக்கப்பட்டது .
நிகழ்வில் , நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு லெதண்டி , கார்பெக்ஸ், மால்புறோ,புரொடக் டிவிசன் தொழிலாளர்களுக்கு ஒருத்தொகுதி முகக்கவசங்களை வழங்கி வைத்தார் .
தோட்ட வைத்திய அதிகாரி மெக்ஹி, லெதண்டி தோட்ட வெளிகள உத்தியோகஸ்த்தர்கள் சிறுவர் நிலைய உத்தியோகஸ்த்தர்கள் ,தோட்ட தலைவர்கள் , உட்பட பெண் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment