தம்பலகாம பிரதேசத்திற்கு ஒரு தனியான வலயக்கல்வி அலுவலகம் தேவை



எப்.முபாரக் -
ம்பலகாம பிரதேசத்திற்கு ஒரு தனியான வலயக்கல்வி அலுவலகம் தேவை என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் இன்று(3) தெரிவித்தார்.
தம்பலகாம பிரதேசம் திருகோணமலை மாவட்டத்தில் மூன்று தேர்தல் தொகுதிகளை இணைக்கும் ஒரே ஒரு பிரதேசமாக இருக்கின்றது.
அதில் ஒரு குறுகிய வித்தியாசத்தில் சம நிலையில் மூவின மக்கள் வாழும் பிரதேசமாக காணப்படுவதோடு இதில் இருந்து இந்த மூவின மக்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி உயர்வடைந்து வரும் கணிப்பீடுகளும் வருடா வருடம் காட்டிக்கொண்டுள்ள காலகட்டத்தில் இங்கு சுமார் சுமார் 30 மேற்பட்ட பாடசாலைகள் காணப்படுகின்றன, அதில் முஸ்லிம் பாடசாலைகளின் அலுவலக விடயம் கிண்ணியாவும், தமிழ் பாடசாலைகளின் அலுவலக விடயம் திருகோணமலைக்கும், சிங்கள பாடசாலை அலுவலக நடவடிக்கை கந்தளாய்க்கும் என பிரிக்கப்பட்டு இம் மூன்று இன பாடசாலை அலுவலக விடயம் சிரமமாக்கப்பட்டுள்ளது மிகவும் கவலைக்குரிய விடயம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆகவே தம்பலகாம பிரதேசத்துக்கு ஒரு தனி வலயக்கல்வி அலுவலகம் ஒன்று தனியாக இயங்க வேண்டிய தேவைப்பாடு அவசியம். இது சம்பந்தமாக விரைவில் தரவுகள் திரட்டி தொகுத்து நேரடியாக கல்வி அமைச்சரை சந்தித்து பேசகூடி ஏற்பாடுகளை எமது கட்சி நடவடிக்கைகளை செய்து வருகிறோம் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்

கல்வி வலயத்தின் தேவைப்பாடுகள் குறித்தான தகவல்கள் இருப்பின் தமக்கு தெரியப்படுத்துமாறு கல்வி அதிகாரிகளிடம் கோரியுள்ளதாகவும் தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :