இலங்கை, சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத் தலைவர் ஏ.எம். ஜௌபர் வெளியிட்டுள்ள 73 ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தி



கால­னித்­துவ ஆட்­சியில் இருந்து 1948ஆம் ஆண்டு இலங்கைக்கு சட்­ட­ரீ­தி­யாக சுதந்திரம் கிடைக்கப் பெற்றது. பெற்ற சுதந்­திரம் பாது­காக்­கப்­பட வேண்டுமென்பதுடன், தற்போது கொவிட் - 19 இனால் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசாங்கம் முன்வந்துள்ளதையிட்டு பாராட்டுவதாக இலங்கை, சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத் தலைவர் ஏ.எம். ஜௌபர் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத் தலைவர் வெளி­யிட்­டுள்ள சுதந்­திர தின செய்­தியில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது;

இலங்­கையின் 73ஆவது சுதந்­திர தினத்தை நாம் இன்று கொண்­டா­டு­கின்றோம். நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­து­வதுடன், நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிக்கும் துறைகளுள், சுற்றுலாத் துறையானது பல்வேறு பொருளாதார நோக்கங்களுக்கு உதவி வருகிறது. நாட்டிற்கான மூன்றாவது மிகப்பெரிய அந்நிய செலாவணி வருவாய் என்பதோடு மட்டுமல்லாமல், ஏராளமான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளும் சுற்றுலாத்துறையினால் உருவாக்கப்படுகின்றன.

இலங்கை அரசாங்கம் சுற்றுலா துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான உபாயங்களை கையாண்டு வருகின்றது.

கொவிட் தடுப்பு மருந்தினை அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளதனால், சுற்றுலாத்துறை இன்னும் முன்னேற்றமடைய வாய்ப்புள்ளது.

எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கொவிட் தொற்றுநோய் புதிய சவாலாக மாறி இலங்கைக்கு மட்டுமல்ல முழு உலக சுற்றுலாத் துறைக்கும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சவாலில் இருந்து மீளும் திட்டத்தை இலங்கை விரைந்து கையிலெடுக்கவேண்டும் என 73 ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத் தலைவர் ஏ.எம். ஜௌபர் தெரிவித்துள்ளா்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :