இலங்கையின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் நிறுவனத்தினால் அம்பாறை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 2021.02.03 இடம்பெற்றது
நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல்.பண்டாரநாயக பிரதம அதிதியாக கலந்துகொண்டு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார்
ஜனாதிபதி கோட்டாபய ராஐபக்சவின் சுபீட்சத்தை நோக்கிய எதிர்காலம் எனும் கோட்பாட்டுக்கமைய வளமான நாடு தரமான கல்வி என்ற தொனிப் பொருளுக்கமைய இக் இக் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது அம்பாறை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் திறமை காட்டிய தேவையுடைய மாணவர்களுக்கு 1500 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன
இனங்களுக்கிடையே ஐக்கியம் புரிந்துணர்வு, ஒற்றுமை என்பனவற்றை மேம்படுத்தும் வகையில் "மாணவர் மகிமை" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வெஸ்ட் ஒப் யங் அரச சார்பற்ற நிறுவனத்தின் செயலாளர் ஏ புஹாது, அம்பாறை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் முஸ்தபா, அம்பாரை மாவட்ட சமுக மன உள அதிகாரி யூ எல் அசாருத்தின், அம்பாறை மாவட்ட செயலக அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ஐ எல் எம் இர்பான் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
0 comments :
Post a Comment