இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். அதன் பின் இதனை அரசியலாக்கி முஸ்லிம்களை உசுப்பேற்றாமல் அரசை அணுகிய ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொல்லுங்கள்.
இனியாவது முரண்பட்டு நிற்காமல், எடுத்ததற்கெல்லாம் மஹிந்த, கோட்டாவில் பழி போடாதீர்கள். ஏற்கனவே எரித்ததுதானே என்று விதண்டாவாதம் புரிய வேண்டாம்.
ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றொழித்த பிரபாரனை கூட மன்னித்து அவரைக்கண்டு பேசி புரியாணி சாப்பிட்ட ஹகீமை இந்த சமூகம் ஏற்றிருந்தது. பிரபாகரன் ஏற்கனவே கொன்றவர்தானே, ஏன்டா பேசப்போனாய் என்று ஒரு முஸ்லிமாவது ஹக்கீமை கேட்டானா?
ஆகவே இறைவனை புகழுங்கள். விமர்சனங்களை நிறுத்துங்கள். உங்கள் எழுத்துக்கள் கண்கானிக்கப்படுகின்றன.
ஜனாஸா எரிப்பதை நிறுத்தியமை ஹக்கீமுக்கும் அவரது கட்சிக்கும் பாரிய தோல்வி. அதனால் மீண்டும் எரிக்கும் நிலையை கொண்டு வர இனவாதிகளை உசுப்பேத்துவர்
ஆகவே புத்திசாலித்தனமாய் வாழ்வோம்.
இதே வர்த்தமாணி கெஸட்டை மீண்டும் எரிப்பது மட்டுமே என மாற்றுவது அரசுக்கு பெரிய வேலை இல்லை. அவ்வாறு நடக்காமல் இருப்பது முஸ்லிம்களின் நடவடிக்கைகளில்தான் உள்ளது..
0 comments :
Post a Comment