சிறுபான்மை மக்களை வீதிகளில் இறங்கி போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளியுள்ளனர் – அமீர் அலி

எச்.எம்.எம்.பர்ஸான்-

பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு பொலிகண்டி வரையான இந்தப் போராட்டம் நீதி வேண்டி நடாத்தப் படுகின்ற ஒரு போராட்டமே என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இடம்பெறும் அடக்கு முறைகளை எதிர்த்து நடைபெறும் பேரணி இன்று (4) ஓட்டமாவடியை வந்தடைந்தது. அப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போதே முன்னாள் இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,

இந்தப் பயணம் தமிழ், முஸ்லிம் சமூகம் எதிர்காலத்திலும் ஒற்றுமைப்பட்ட சமூகமாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை என்னிடத்தில் இருக்கிறது.

அந்தவகையில், இந்த தமிழ் தலைவர்கள் மத்தியில் முஸ்லிம் தலைவர்கள் நம்பிக்கையோடு பேச வேண்டிய காலகட்டம் வந்திருக்கிறது. என்பதுதான் எனது எதிர்பார்ப்பு.

எனவே, சிறுபான்மை சமூகம் ஒதுக்கப்படுகின்ற போது அதன் நிலவரத்தை இந்த நாட்டில் இருக்கின்ற ஆட்சியாளர்களுக்கு நாங்கள் துல்லியமாக பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

சிறுபான்மை சமூகத்தை இந்த நிலவரத்துக்கு ஏற்படுத்தியவர்களும் அவர்கள்தான் சிறுபான்மை மக்களை வீதிகளில் இறங்கி போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளியவர்கள் அவர்கள்தான்.

இந்த அரசாங்கத்தின் சட்டதிட்டங்கள், நிகழ்ச்சி நிரல்கள்தான் எங்களை வீதிக்கு இறங்கி போராட வைத்துள்ளது.

அவர்கள் நினைப்பதுதான் சட்டம். அவர்கள் நினைப்பவர்களை பிடிப்பார்கள் நினைப்பவர்களை விடுதலை செய்வார்கள் அந்த அளவுக்கு இந்த நாட்டிலே சட்டம் மெளனித்து போயுள்ளது என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :