உ.பி பாஜக அரசை கண்டித்து சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம்

த்திரபிரதேசத்தில் யோகி தலைமையிலான பாஜக அரசு அங்கு வாழ்கின்ற முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக, மனித உரிமை மீறல்கள் மற்றும் மத ரீதியான படுகொலைகளை தொடர்ந்து நடத்தி வருவதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இதனை கண்டித்து, பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தென்சென்னை மாவட்ட தலைவர் அபுபக்கர் சாதிக் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முஹம்மது அலி, எஸ்.டி.பி.ஐ வடசென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரஷித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட சென்னை மாவட்ட தலைவர் ஃபக்கீர் முஹம்மது வரவேற்றார்

மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி, கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில துணைத்தலைவர் அப்துர் ரஹ்மான், நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் வட சென்னை மாவட்ட தலைவி கதீஜா பீவி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

இறுதியாக துறைமுகம் தொகுதி தலைவர் ஃபஹத் நன்றி கூறினார். , ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் திரளாக கலந்துக் கொண்டு யோகி அரசுக்கு எதிராகவும், சிறை வைக்கப்பட்டுள்ள இருவரின் விடுதலைக்காகவும் கோஷம் எழுப்பினர்.

மாநிலத்தலைவர் முஹம்மது சேக் அன்சாரி பேசியதாவது,

கடந்த பிப்ரவரி 11 - ஆம் தேதி பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்டின் வளர்ச்சி பணிகளுக்காக சென்றிருந்த கேரளாவை சார்ந்த அன்சாத் மற்றும் ஃபிரோஸ் ஆகிய இரு பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் தன் சொந்த மாநிலத்திற்கு ரயிலில் திரும்பும் வழியில், மத்தியபிரதேச மாநிலத்தில் வைத்து உத்திரப்பிரதேச சிறப்பு காவல் படையால் சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளனர். பின்னர் அவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து பிப்ரவரி16 அன்று அவசரமாக போலியான பயங்கரவாத வழக்கில் தொடர்புப்படுத்தி தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் கைதுச் செய்துள்ளோம் என பொய்யை பரப்பி இரு உறுப்பினர்களையும் சிறையில் அடைத்துள்ளனர்.

உ.பி யில் முஸ்லிம்களுக்கும், தலித்துகளுக்கும் எதிராக யோகி தலைமையிலான பாஜக அரசு நடத்திய அடக்குமுறைகளை ஆவணப்படுத்தி, அவற்றை வழக்காக பதிந்து, ஃபாசிச அரசின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான தொடர் சட்டப்போராட்டத்தையும், களப்போராட்டத்தையும் பாப்புலர் ஃப்ரண்ட் தலைமை தாங்கி நடத்துவதன் விளைவாகவே இந்த அடக்குமுறை பாப்புலர் ஃப்ரண்ட் மீது ஏவப்பட்டுள்ளது.

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதுபோல, இன்று மத்திய பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் மனித உரிமை மீறல்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றது. 

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்து கேள்வி கேட்டாலே வழக்கு போடப்படுகிறது. அடுத்த நாளே பிணை பெற்று வெளியே வந்துவிடுவார்கள் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு உரிமைகளுக்காக போராடிய மக்கள் மீது கடுமையான தேச துரோக வழக்குகளையும், யூஏபிஏ என்கிற கருப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள் .மத்திய பாஜக அரசு இந்தியாவுடைய அனைத்து குடிமக்களுக்கும் விரோதமான அரசாக செயல்படுகின்றது என்பதை நாம் உணர வேண்டும்.

எனவே உபி பாஜக அரசு முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மீதான அடக்குமுறைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் இருவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :