கல்முனை பிரதேச செயலக எல்லைப்பிரச்சினை தேர்தல் கால உண்டியலாக பாவிக்கப்பட்டு வருகின்றது என கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் நஸீர் ஹாஜியார் தெரிவித்துள்ளார்.
பொத்துவில் -பொலிகண்டி பேரணி கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு திங்கட்கிழமை (15) இரவு கல்முனையில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில்
தேசிய ரீதியாக இன்று பேசுபொருளாக இருக்கின்ற விடயம் எல்லைநிர்ணம்.அதாவது பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமசேவகர் பிரிவுகள் பற்றியதாகும்.அம்பாறை மாவட்டத்தை பொறுத்தமட்டில் சாய்ந்தமருது அட்டாளைச்சேனை நிந்தவூர் போன்ற பிரதேசங்கள் 100 வீதம் முஸ்லீம்கள் வாழும் பகுதிகளாகும்.
இவற்றை எந்த அடிப்படையில் கிராமசேவகர் பிரிவுகளை பிரித்தாலும் எந்தப்பாதிப்பின்றி அதிகரித்த அபிவிருத்தி நிதி வாய்ப்புக்கள் உருவாகும்.ஆனால் கடந்த 30 வருடங்களுக்கு மேலான கல்முனையில் புரையோடிப்போயுள்ள விடயம் தான் கல்முனை பிரதேச செயலகத்தில் உள்ள இனரீதியான சீர்கெட்ட நிர்வாக நடவடிக்கையாகும்.இங்கு தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.இதை தீர்வு காணுகின்ற பொறுப்பு சகல சமூகத்தை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் சிவில் அமைப்பினர்களுக்கும் உண்டு.இங்கு கல்முனையில் என்ன நடக்கின்றது என்பது தான் தற்போதைய விடயம்.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி 1986 ஆண்டு உருவாக்கப்பட்ட போது முஸ்லீம்கள் தேசிய பிரச்சினைகளில் புறக்கணிக்கப்பட்டார்கள் என கூறி தான் உருவாக்கினார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி 1986 ஆண்டு உருவாக்கப்பட்ட போது முஸ்லீம்கள் தேசிய பிரச்சினைகளில் புறக்கணிக்கப்பட்டார்கள் என கூறி தான் உருவாக்கினார்கள்.
தேசிய தீர்வுகள் சம்பந்த மாக முஸ்லீம் காங்கிரஸ் எந்த தீர்வுகளையும் முன்வைக்கவில்லை.
மாகாண சபை சட்டதிட்டங்களின் போது எல்லை நிர்ணயத்தில் கூட எதுவும் அவர்கள் செய்யவில்லை.பிரதேச செயலகத்திலாவது இருந்து அந்த கட்சியின் பிரமுகர்கள் ஒன்று கூடி ஏதாவது செய்கின்றார்களா எனில் ஒன்றுமே இல்லை.
சிவில் அமைப்புகள் செய்கின்றார்கள் என அவர்களின் தலைகளின் சுமத்திவிட்டு அவர்கள் ஒதுங்கியுள்ளார்கள்.
மக்கள் இவர்களை தெரிவு செய்து அனுப்பியது இவ்விடயத்திற்கு தான்.2001.02.20 வர்த்தமானி ஒன்றின் ஊடாக கல்முனை பிரதேச செயலகம் பிரகடனப்படுத்தப்படுகின்றது.பாராளுன்ற சட்டத்தின் படி ஒரு அமைச்சர் ஒரு பிரதேசத்தின் பெயர் மற்றும் எல்லைகளை வர்த்தமானியில் குறிப்பிட முடியும் என கூறப்படுகின்றது.
1989.12.14 திகதி திடிரென்று இ.என்.டி.எல்.ப் இயக்க தலைவர் கலாவின் தலைமையில் ஏனைய ஆயுதக்குழுக்களும் இணைந்து பிரதேச செயலகத்தை சுற்றி வளைத்து அங்கு 30 தமிழ் அதிகாரிகளை வேறுபடுத்தி அதே கட்டிடத்தில் மற்றுமொரு பிரிவில் தமிழ் பிரதேச செயலகம் என பெயரிடப்பட்டு சட்டவிரோதமாக ஆயுத முனையில் இயங்கியது.அதன் பின்னர் குறித்த பிரதேச செயலகத்திற்கு சுனாமியின் பின்னர் கட்டடம் கட்டப்பட்டது.இது தான் தற்போது கல்முனை உப பிரதேச செயலகம் என அழைக்கப்படுகின்றது.இதில் இனரீதியாக எல்லைப்பிரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஆனால் இலங்கையின் அரசியல் அமைப்பானது இனரீதியாக எல்லைப்பிரிப்புகள் இடம்பெற முடியாது என கூறுகின்றது.ஆனால் இங்கு இனரீதியான விடயங்கள் இடம்பெறுகின்றது.இவ்விடயங்களை வெளிக்கொணருவது எமது மக்கள் பிரதிநிதிகளின் வேலையாகும்.
ஆனால் அவ்வாறின்றி தேர்தல் கால உண்டியலாக பிரதேச செயலகம் பாவிக்கப்பட்டு வருகின்து.அரசியல் வாதிகளுக்கு இப்பிரதேச செயலகம் நல்லதொரு மூலதனம் .இந்த விடயம் தொடர்பில் சகல ஆவணங்களையும் கல்முனை மறுமலர்ச்சி மன்றமானது பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளது.
இது இவ்வாறிருக்க தற்போது எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது.எனவே பொருத்தமான முறையில் அந்த எல்லை நிர்ணயமானது பிரதேச செயலகத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கெட்டுக்கொள்கின்றேன் என்றார்.
இது இவ்வாறிருக்க தற்போது எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது.எனவே பொருத்தமான முறையில் அந்த எல்லை நிர்ணயமானது பிரதேச செயலகத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கெட்டுக்கொள்கின்றேன் என்றார்.
0 comments :
Post a Comment