மட்டக்களப்பு மாவட்ட தொண்டு நிறுவன அருவி பெண்கள் வலையமைப்பின் பயிற்சி நெறி..

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான அருவி பெண்கள் வலையமைப்பானது மாவட்ட ரீதியாக 2 ஆம் கட்ட தலை முறையினரான இளம் பெண் பிள்ளைகளை உள்வாங்கி தலைமைத்துவத்துடனான பெண்கள் சமூக மட்டத்தில் சேவையை வழங்க கூடிய ( ACCA அக்கா ) எனும் குழுவாக உருவாக்குதலுக்கான 3 மாத உளவள பயிற்சி நெறி ஆரம்பிக்கப்படவுள்ளன

அதற்கான ஆரம்ப நிகழ்வாக பாடசாலைகள் .பல்கலைக்கழகங்கள் மற்றும் கிராம இளம் பெண் தலைமுறையினர் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான மூன்று மாத கால உளவள தொடர்பான பயிற்சி நெறி வழங்குவதற்கான முதல் நாள் நிகழ்வு இன்று மட்டக்களப்பு தன்னாமுனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது .

அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் , சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இன்றைய நிகழ்வில் கிழக்குமாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் என் .தனஞ்சயன் , இலங்கை மனநல மருத்துவ கல்லூரி உளவியல் சிரேஷ்ட ஆலோசகர் மனநல மருத்துவ நிபுணருமான டி. கடம்பநாதன் , கல்குடா கல்வி வலய வலயக்கல்வி பணிப்பாளர் டி. ரவி , கிழக்கு மாகாண சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ் .அருள்மொழி மற்றும் அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :