இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினம் காத்தான்குடியில் விமர்சையாக நடைபெற்றது..



எம்.பஹ்த் ஜுனைட்-
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் சக வாழ்வு மையத்தின் ஒருங்கிணைப்பில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73 சுதந்திர தின நிகழ்வு காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் வளாகத்தில் இன்று இடம்பெற்றது.

பல்லினமக்கள் வாழும் இலங்கை திரு நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்ட முஸ்லிம்களது தேசப்பற்று, தேசிய நலன் ,இலங்கை எமது நாடு இலங்கையர் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற தேசிய ஒருமைப்பாட்டையும்,மனிதநேயம், சகவாழ்வு முதலானவற்றை தேசிய ரீதியில் பறை சாற்றும் நோக்கில் இந் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.எம்.தெளபீக் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் கனா கொஸ்வத்த கலந்துகொண்டதுடன் கெளரவ அதிதிகளாக காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதய ஸ்ரீதர் ,சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சகர் எல்.ஆர்.குமாரஸ்ரீ , இராணுவ கட்டளை அதிகாரி என்.டபிள்யூ. எம்.உதய குமார ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சர்வமத மதகுருமார்கள் , பாடசாலை மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், சம்மேளனத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எல பலர் கலந்துகொண்டு நாட்டின் மீதான தேசப்பற்றை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :