அஜ்மல் அஸீஸ் கனடாவில் நடைபெற்ற iCAN சர்வதேச கண்டுபிடிப்பு போட்டியில் தங்கப் பதக்கத்தையும் விஷேட விருதையும் பெற்றுள்ளார்.குருநாகல் மாவட்டம் பறகஹதெனியவைச் சேர்ந்த பொறியியலாளர் அஜ்மல் அஸீஸ் கனடாவில் நடைபெற்ற iCAN சர்வதேச கண்டுபிடிப்பு போட்டியில் கடந்த வருடம் பங்குபற்றி தங்கப் பதக்கத்தையும் விஷேட விருதையும் பெற்றுள்ளார்.

ருஹுனு பல்கலைக்கழக பட்டதாரியான அஜ்மல் அஸீஸ் பொறியியல் பீடத்தில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் துறையில் கற்று முதல் தரத் தேர்ச்சி பெற்றதுடன் அப்பீடத்திலேயே தற்போது பணி‌ புரிகின்றார். அதேவேளை அவர் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகமொன்றில் தற்போது கலாநிதிப் பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

இவரது பட்டப்படிப்பு ஆய்வின் விளைவாக கண்டுபிடித்த உயிர் மருத்துவ உபகரணமானது பல விருதுகளை வென்றெடுத்துள்ளது. அக்கருவியை உபயோகித்து, உடலிலிருந்து இரத்தத்தை வெளியெடுக்காமல் , இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் செறிவை அளவிட முடியும்.
கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பயணத் தடைகளால் இவருக்கான பதக்கம் மற்றும் விருதுகள் இலங்கை கண்டுபிடிப்பாளர் ஆணையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பு இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொலவினால் அஜ்மலுக்கு கொழும்பில் நடந்த நிகழ்வில் கையளிக்கப்பட்டது.
இவரது பல ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் ஏற்கனவே பல்கலைக்கழக மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றையும் வென்றெடுத்துள்ளன. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய கண்டுபிடிப்பாளர்களுக்கான சங்கம் இவருக்கு வழங்கிய தங்கப் பதக்கம் அவற்றில் குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் கடந்த மாதம் இடம் பெற்ற ருஹுனு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின்போது பொறியியல் பீடத்தின் ஒட்டுமொத்த சிறந்த மாணவனுக்கு வழங்கப்படும் Dean Award மற்றும் ஆய்வு மற்றும் அபிவிருத்தியில் தேர்ச்சியை வெளிப்படுத்திய சிறந்த மாணவனுக்கான Outstanding Student Award உம் வழங்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :