காரைதீவில் மேலும் 5 மாணவருக்கு கொரோனா! சிவப்பு வலயமாக பிரகடனம்:பாடசாலைகள் ஸ்தம்பிதம்!



வி.ரி.சகாதேவராஜா-
ல்முனை சுகாதாரப்பிராந்தியத்திலுள்ள காரைதீவில் மேலும் ஜந்து மாணவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பிமனையின் இன்றையகளநிலைவர அறிக்கையில் இவ்விபரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காரைதீவுப்பிரதேசத்தில் இதுவரை 69 பேருக்கு தொற்றுறுதி இனங்காணப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளியன்று காரைதீவு சண்முகா வித்தியாலயத்தில் இரு மாணவர்கள் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து கொரோனாத் தொற்றுக்குள்ளான குறித்த இரண்டு மாணவருடன் நெருங்கிப்பழகிய 32 மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை பிசிஆர் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

நேற்றுக்கிடைத்த பி சிஆர் முடிவுகளின்படி அந்த 32பேரில் மூன்று மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்களை சிகிச்சைநிலையத்திற்கு சுகாதாரத்துறையினர் நேற்று கொண்டுசென்றனர்.வீட்டிலுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேள மேலும் தொற்று இனங்காணப்பட்ட தாதிய உத்தியோகத்தரது பிள்ளைகள் இருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மற்றும் இ.கி.மி.பெண்கள் பாடசாலையைச் சேர்ந்தவர்களாவர்.  அவர்களும் சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டனர்.
மாணவரிடையே கொரோனா தொற்று அதனைத்தொடர்ந்த பிசிஆர் சோதனைகள் அனைத்தும் பெற்றோரிடையேயும் மாணவரிடையையும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

பாடசாலைகள் ஸ்தம்பிதம் கடந்த (26)செவ்வாய்க்கிழமை முதல் காரைதீவிலுள்ள பெரும்பாலான பாடசாலைகள் மாணவரின்றி வெறிச்சோடிக்காணப்பட்டன.

அநேகமான பாடசாலைகளில் 10 வீதத்திற்கும் குறைவான மாணவர்களே வந்திருந்தனர்.ஆசிரியர்களும் குறைவாகவே காணப்பட்டனர். கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மீண்டும் ஸ்தம்பிதநிலையடைந்துள்ளன.
பிரதேசசுகாதாரவைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா பஷீர் சமகாலநிலைமை தொடர்பாக பிரதேசசெயலர் தொடக்கம் ஊர்ப்பிரமுகர்களை அழைத்து விழிப்புணர்வுகூட்டத்தை நடாத்தினார். இன்று அதிபர்களை அழைத்து கூட்டம் நடாத்தப்படவிருக்கிறது.

சிவப்பு எச்சரிக்கை வலயம்!

இதேவேளை காரைதீவுப்பிரதேசம் தொடர்ந்து சிவப்பு எச்சரிக்கை வலயமாக, உயர் ஆபத்தான பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனை அறிவித்திருக்கிறது.

கல்முனைப்பிராந்தியத்தில் 3 பிரதேசங்கள் சிவப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 14 நாட்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட பெறுபேற்றின் அடிப்படையில் கல்முனைதெற்கில் 46 பேரும் சாய்ந்தமருதில் 19 பேரும் காரைதீவில் 23 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இம்மூன்று பிரதேசங்களும் சிவப்பு எச்சரிக்கை வலயமாக சுகாதாரத்திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரை கல்முனைப்பிராந்தியத்திற்குட்பட்ட காரைதீவுப்பிரதேசத்தில் இதுவரை 69 பேருக்கு தொற்றுறுதி இனங்காணப்பட்டுள்ளது.இந்த 69 பேரில்39 பேர் குணணமாகி வீடுவந்துசேர்ந்துள்ளனர். மீதி 30 பேர் தற்சமயம் வைத்தியசாகைளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

இதுவரை காரைதீவில் 1743 பேருக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்றுமட்டும் 44 பேருக்கு பிசிஅர் அன்ரிஜன் செய்யப்பட்டது.

எதுஎப்படியிருப்பினும் காரைதீவில் ஏற்பட்டுள்ள இத்தொற்றுக்கள் பரம்பலடையவில்லை மாறாக கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக கூறப்படுகிறது. இது இவ்வாறிருக்க மாணவர்கள் இவ்விதம் தொற்றுக்குள்ளானமையும் சிவப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டமையும் காரைதீவு மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :