கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க வாழைச்சேனையில் வீடு வீடாக சென்று விழிப்பூட்டும் நிகழ்வு:

எச்.எம்.எம்.பர்ஸான்-


கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டி வீடுவீடாக சென்று விழிப்பூட்டும் நிகழ்வு நேற்று (27) இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் த.யசோதரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான கே.எல்.அஸ்மி, எப்.நபீரா, இக்பால் சனசமூக நிலைய தலைவர் ஏ.எல்.லியாப்தீன், கிறிசலிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் கஜேந்திரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இத் திட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வீடுவீடாக சென்று பொது மக்களிடம் கொரோனா வைரஸ் தொடர்பான துண்டுப்பிரசுரங்களை வழங்கியதுடன், சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.

இவ் விழிப்பூட்டல் திட்டத்திற்கு கிறிசலிஸ் நிறுவனம், வாழைச்சேனை பிரதேச சபை, இக்பால் சனசமூக நிலையம், சிவன் தீவு வளர்பிறை சனசமூக நிலையம் ஆகியவை அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :