காரைதீவில் 3பாடசாலைகள் மூடப்பட்டன! இதுவரை 69 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம்!

வி.ரி.சகாதேவராஜா-
ல்முனை சுகாதாரப்பிராந்தியத்திலுள்ள காரைதீவில் மேலும் ஜந்து மாணவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து அங்குள்ள மூன்று பாடசாலைகள் இன்று(29) வெள்ளிக்கிழமை தொடக்கம் ஒருவாரகாலத்திற்கு மூடப்பட்டுள்ளன.

சுகாதாரத்துறையினரின் பரிந்துரைக்கேற்ப காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி சண்முகா மகா வித்தியாலயம் இ.கி.மி.பெண்கள் பாடசாலை ஆகிய 3 பாடசாலைகளே இவ்விதம் மூடப்பட்டுள்ளன என கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தெரிவித்தார்.

இதுவரை காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் ஜந்துமாணவர்களும் இ.கி.மி.பெண்கள் பாடசாலை மற்றும் விபுலாநந்தா மத்திய கல்லூரியில் தலா ஒரு மாணவரும் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். முன்னெச்சரிக்கையாகவே இவ்விதம் பாடசாலை மூடப்பட்டுள்ளதாக கூறினார்.

கடந்த வெள்ளியன்று காரைதீவு சண்முகா வித்தியாலயத்தில் இருமாணவர்கள் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து நடாத்திய பிசிஆர் சோதனைகள் இவ்விதம் இதுவரை ஏழு மாணவர்கள் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.

காரைதீவுப்பிரதேசத்தில் இதுவரை 69பேருக்கு தொற்றுறுதி இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :