கல்குடாவில் சில வீதிகள், தாழ் நில பிரதேசங்கள், குடியிருப்புக்கள் என்பன நீரில் மூழ்கியுள்ளன.எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பித்துள்ள மழையினால் கல்குடாத் தொகுதியிலுள்ள சில வீதிகள், தாழ் நில பிரதேசங்கள், குடியிருப்புக்கள் என்பன நீரில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக வாழைச்சேனை, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி, வாகரை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் பெரும்பாலான தாழ் நில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு காணப்படுவதுடன், சில இடங்களில் குடியிருப்புக்குள் நீர் புகுந்துள்ளமையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனை, மாவடிச்சேனை, செம்மண்ணோடை, தியாவட்டவான், மயிலங்கரச்சை பிரதேசமும், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மாஞ்சோலை, காவத்தமுனை பிரதேசமும், வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கறுவாக்கேணி, மீராவோடை, கிண்ணையடி, ஆஞ்சநேயர்புரம், கண்ணகிபுரம், விநாயகபுரம், மருதநகர் ஆகிய பிரதேங்களில் வெள்ள நீர் காணப்படுவதுடன், இதுவரை எந்தவித இடம்பெயர்வுகளும் இடம்பெறவில்லை என்றும், தற்போது மழை தொடர்ச்சியாக பெய்யும் நிலைமை ஏற்படும் பட்சத்தில் இடம்பெயர்வுகள் இடம்பெறக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக பிரதேச செயலாளர்கள் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :