பாரிய கல் ஒன்று சரிந்து விழுந்ததால் வீடு சேதம்

கிஷாந்தன்-

லையக பகுதிகளில் பிற்பகல் வேளைகளில் பெய்கின்ற மழையினால் கினிகத்தேனை பிட்டவல கீ கியனாகெதர கிராம பகுதியில் உள்ள குடியிருப்பொன்றில் பாரிய கல் ஒன்று சரிந்து விழுந்துள்ளதால் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வீட்டின் இரண்டு அறைகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், வீட்டிலிருந்த சில பொருட்கள் சேதமாகியுள்ளதோடு, சுவர்களும் சரிந்து விழுந்துள்ளது.

குறித்த சம்பவ இடம்பெறும் போது வீட்டில் ஆறு பேர் இருந்துள்ளனர்.

வீட்டிலிருந்தவர்கள் பாதுகாப்பாக அயலவர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டு தற்போது உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர். எனினும் சம்பவம் ஏற்படும் போது, சிறு குழுந்தையோடு இருந்த தாய் காயங்களுக்குள்ளாகி கினிகத்தேனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவத்தை கினிகத்தேனை பொலிஸார் நேரடியாக வந்து பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை கிராம சேவகர் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :