கொரோனா இந்துமத சிந்தனைக்கு உயிர்கொடுத்துள்ளது! சித்தானை ஆலய யாகத்தில் மேலதிகஅரசஅதிபர்.வி.ரி.சகாதேவராஜா-
ந்து மதத்தின் கோட்பாடான அனைத்து உயிர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்ற உயரிய சிந்தனைக்கு உயிர் கொடுத்து மீண்டும் ஞாபகப்படுத்தியிருக்கின்றது கொரோனா வைரஸ்.

இவ்வாறு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் தெரிவித்தார்.
கொரோனா தொற்றிலிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் ஏற்பாட்டில், காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலயபரிபாலனசபையின் ஒத்துழைப்புடன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் ,கிரியா குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் நேற்று அதிகாலை 05.30 மணிக்கு இடம்பெற்றது.

அங்கு மேலதிகஅரசஅதிபர் மேலும் பேசுகையில்.

நாம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வாழ்க்கை முறைகளை விடுத்து இன்று சுயநலமிக்கவர்களாக நான் எனது குடும்பம் என்ற வட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

உலகம் நான் என்ற சுயநல சிந்தனையில் இருந்து நாம் என்னும் சிந்தனைக்குள் மெதுமெதுவாக காலடியெடுத்து வைக்கின்ற உன்னத நிலைக்கு இந்த கொரோனா நோய் மனிதர்களை இட்டுச் சென்று இருப்பதோடு, மற்றவர்களின் நலத்துக்காகவும் கட்டாயம் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் என்ற நிலைக்கு மனிதனை நெறிப்படுத்தியுள்ளது. என்றார்.


108 மூலிகைகளுடன் ஆலயத்தலைவர் சி.நந்தேஸ்வரனின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் காரைதீவு பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் என். அருந்திரன் ஏனைய ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள் கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி நிர்வாகத்தினர் அதிகாரிகள் அறநெறிமாணவர்கள் எனப்பலர் சுகாதார நடைமுறைப்படி கலந்து கொண்டனர்.

இப்பிரார்த்தனை நிகழ்வானது 6.30 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் 'ஆலயதரிசனம்' நிகழ்வில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.செய்தியாளர் வி.ரி.சகாதேவராஜா ஆயத்திலிருந்து நிக்ழ்ச்சியை அஞ்சல் செய்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :