விவசாயிகளின் போராட்டத்திற்கு துணை நிற்போம் - பாப்புலர் ஃப்ரண்ட்

பு
திய விவசாய சட்டங்களுக்கு எதிராக இந்திய விவசாயிகள் முன்னெடுத்துள்ள போராட்டங்களுடன் துணை நிற்க வேண்டும். இது நாட்டின் மீது அக்கறை கொண்ட குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மீதும் கடமை என பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொதுச் செயலாளர் அனீஸ் அகமது தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

சிஏஏ, என்ஆர்சி போன்ற வகுப்புவாத சட்டங்களைப் போலவே, நாட்டின் வேளாண்மை மற்றும் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் மூன்று விவசாய சட்டங்களும் விவசாயிகளுடனோ அல்லது எதிர்க்கட்சிகளுடனோ எந்த ஆலோசனையும் நடத்தாமல் சட்ட அவைகளின் ஊடாக விரைந்து நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த விவசாய எதிர்ப்பு மசோதாக்களை இறுதி செய்வதற்கு முன்னர் விவசாய அமைப்புகளுடன் எந்தவிதமான கலந்துரையாடல்களும் அரசாங்கம் நிகழ்த்தவில்லை என்று சமீபத்திய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக அளிக்கப்பட்ட பதிலின் மூலம் தெளிவாக தெரிகிறது.

விவசாயத்தை சீர்திருத்துவது போன்ற இனிப்பு தடவிய கூற்றுகளின் மூலம் பாஜக அரசு பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு விவசாயிகளை சுரண்டுவதற்கு சுதந்திரமான வாய்ப்பினை அளிக்கிறது. விவசாயிகளில் பெரும் சதவீதம் பேர் ஏற்கனவே துன்பத்தில் உள்ள, செலுத்த முடியாத கடன்கள் காரணமாக தற்கொலைகளை நாடுகின்ற ஒரு நாட்டில், அரசாங்க ஆதரவும் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையும் இன்றியமையாத ஒன்று.

நிச்சயமாக, குறைந்தபட்ச விலை நிர்ணயம் மற்றும் மண்டிகளை புதிய சட்டங்கள் மூலம் முடிவுக்கு கொண்டு வருவதற்கான அரசாங்கத்தின் முடிவு அவர்களின் வாழ்க்கையில் மேலும் துன்பகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

அதனால்தான், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கோ அல்லது மீட்பர்களுக்கோ காத்திருக்காமல் அதற்கு எதிராக வீதிகளில் வர தங்களைத் தாங்களே முன் எடுத்துக் கொண்டனர். விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் வெடித்த மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்று அரசின் ஆணவம் மற்றும் அக்கறையின்மைக்கு மத்தியில் இரண்டாவது மாதத்தில் நுழைகிறது.

எலும்புகளைக் கூட குளிர்விக்கும் குளிரில் போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலைகளை தங்கள் வீடாக மாற்றியுள்ளனர். இதுவரை கிட்டத்தட்ட 30 பேர் ஏற்கெனவே உயிர் இழந்துள்ளனர்.

எவ்வாறாயினும், போராட்டங்களை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுவதாகவும், விவசாயிகளை காலிஸ்தானிகள், ஜிஹாதிகள், மாவோயிஸ்டுகள், நக்சல்கள் மற்றும் தேசவிரோதிகள் என்றும் அழைத்து அதிகாரிகள் களங்கப்படுத்த முயற்சிக்கின்றனர்.

பிரதம மந்திரி உரையாடல்களை நடத்துவதற்கு தனது அரசாங்கத்தின் விருப்பத்தை வெளிப்படுத்துவதைத் தவிர, அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய கணிசமான முயற்சிகள் எதுவும் செய்யவில்லை. புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் விவசாயிகளின் நேரத்தை வீணடிப்பதற்கு வசதியானது என்று பாஜக அரசாங்கம் கருதுகிறது. மேலும் பல முறை இந்த கூட்டங்கள் முடிவில்லாமல் நிறைவடைந்துள்ளன.

சி ஏ ஏ மற்றும் என் ஆர் சி க்கு எதிராக குரல் கொடுத்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செயல்பாட்டாளர்கள் மற்றும் தலைவர்களுக்கு டெல்லியில் உள்ள விவசாயிகள் தங்கள் ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் விவசாய எதிர்ப்பு சட்டங்களுக்கு எதிராக மட்டும் எதிர்ப்பு தெரிவிக்காமல், கார்ப்பரேட்-இந்துத்துவா பாசிச மற்றும் ஏகாதிபத்திய திட்டங்கள் போன்ற அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிராக, ஒருமித்த எண்ணம் கொண்டவர்கள் மற்றும் இந்துத்துவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

சங்க பரிவாரால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு முடிவுகளைப் பொருட்படுத்தாமல் நீதி மற்றும் உண்மைக்கு துணை நிற்க வேண்டியது கடமை என்பதால், முஸ்லிம் சமூகம் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் குரல் கொடுக்கவும் முன்வர வேண்டும். புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக இந்திய விவசாயிகளின் போராட்டங்களுடன் துணை நிற்குமாறு நாட்டின் மீது அக்கறை எண்ணம் கொண்ட குடிமக்கள் மற்றும் நாட்டின் அனைத்து தரப்பினரையும் பாப்புலர் ஃப்ரண்ட் அழைக்கிறது.
எனவும் அவர் வெளியிடடுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :