திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சமூர்த்தி வங்கியில் தினமும் பணம் பெற நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.
தம்பலாகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள முள்ளிப்பொத்தானை சமூர்த்தி வங்கி கிளையில் தினமும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மக்கள் நீண்ட வரிசையில் பணம் பெற காத்திருக்கின்றனர்.
அதிகாலை ஐந்து மணிக்கு மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக நீண்ட வரிசையில் சமூர்த்தி பயனாளர்கள் நிற்கின்றனர்.
ஆனால் சமூர்த்தி அலுவலகத்தினால் இருநூறு பேருக்கு மாத்திரமே தொடர் இலக்கங்கள் வழங்கப்படுவதாகவும்,இலக்கங்கள் கிடைக்காத சமூர்த்தி பயனாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதிலும் ஏழு மணிக்கு முன்னதாக வரும் பயனாளர்களுக்கு இலக்கங்கள் சமூர்த்தி உத்தியோகத்தர்களால் எட்டு மணிக்கு பின்னர் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
சமூர்த்தி பயனாளர்கள் கொட்டும் மழையையும் பொறுட்படுத்தாது நீண்ட வரிசையில் நின்று ஏமாற்றத்துடன் செல்லுவதாகவும் தெரிவிக்கும் அதேவேளை சமூர்த்தி பயனாளர்களுக்கு வேண்டியே சமூர்த்தி வங்கியும்,சமூர்த்தி உத்தியோகத்தர்களும் செயற்படுகின்றனர்,அனைவருக்கும் சமூர்த்தி வேவைகள் நிறைவேற்றப்பட சிறந்த செயற்பாடுகளை சமூர்த்தி முகாமையாளர் கையாள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
தற்போது நாட்டில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் சுகாதார நடவடிக்கைகள் இல்லாமல் சமூர்த்தி பயனாளர்கள் செயற்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது.
0 comments :
Post a Comment