கிரேண்ட்பாஸ் நவகம்புரத்தைச் சேர்ந்த மூவின மக்களுக்கும் உலர் உணவுப் பொதிகள்



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கொரோனா தொற்று நோய் காரணமாக முடக்கப்பட்டிருக்கும் கிரேண்ட்பாஸ் நவகம்புரத்தைச் சேர்ந்த மூவின மக்களுக்கும் நவகம்புர மஸ்ஜித் உமர் ஜூம்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க சமயங்களைச் சேர்ந்த சுமார் 2800 குடும்பங்களுக்கு பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டது.

பள்ளிவாசலின் தலைவர் எம்.எம்.எம்.லாமிர் உள்ளிட்ட நிருவாகிகள் மற்றும் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை என்பனவற்றின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளை இலங்கை பைதுல்மால் நிதியம், ஸம் ஸம் பௌண்டேசன், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனம் மற்றும் சிறிலங்கா பிறதர்ஸ் அமைப்பு என்பன பங்களிப்புச் செய்துள்ளன.

இந்நிகழ்வில் மேல்மாகணத்தின் அமரபுர பிரிவின் பிரதான உறுப்பினர் பெரகம விமலதிஸ்ஸ தேரர், நவகம்புர சிறி தர்ம விஜயராமயவின் பிரதான விஹாராதிபதி சிலோகம இந்திரவன்ஷ, உறுகொடவத்த சிறி துர்கா காளியம்மன் இந்து ஆலயத்தின் பிரதம குருக்கள், இலங்கை பைதுல்மால் நிதியத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி இல்யாஸ் அத்மானி, கிரேண்ட்பாஸ் மஸ்ஜிதுகளின் சம்மேளனத் தலைவர் ஹ_ஸைன், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமாவின் கொழும்பு வடக்கு தலைவர் அஷ்-ஷெய்க் அப்துல் ரஹ்மான், கிரேண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, பள்ளிவாசலின் பிரதம இமாம் பஹ்மி ஸதாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :