கல்முனை யில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முகமாக விழிப்பூட்டுவது தொடர்பிலான விசேட கூட்டம்...

றாசிக் நபாயிஸ்-

ல்முனை பிரதேசத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாக மக்களை விழிப்பூட்டுவது தொடர்பிலான விசேட கூட்டம் கல்முனை முகையதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இடம்பெற்றது.

பள்ளிவாசல் தலைவர் டாக்டர் S.M.A அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் A.L.F. ரஹ்மான் உள்ளிட்ட வைத்தியர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், உலமா சபை பிரதிநிதிகள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கொரோனா வைரஸ் பரவலை கல்முனை பிரதேசத்தில் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் சுகாதார துறையினருக்கு வழங்குவது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :