அக்கரைப்பற்றிலிருந்து கல்முனைக்கு தாவிய கொரோனா! முடக்கப்பட்ட பிரதேசங்களில் இராணுவம் காவல்!

வி.ரி.சகாதேவராஜா-

ல்முனை மாநகர எல்லைக்குள்கொரொனா தொற்று அதிகரித்துவருகின்ற காரணத்தினால் அங்கு கல்முனைக்குடி உள்ளிட்ட சில பிரதேசங்கள் மாநகர மேயரினால் முடக்கப்பட்டிருக்கின்றன.

இம்முடக்கம் (20) ஞாயிற்றுக்கிழமை வரை அமுலிலிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட பிரதேசங்களில் இராணுவம் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றது.
கல்முனைப்பிராந்தியத்தில் இதுவரை அக்கரைப்பற்றுப்பிரதேசம் மிக மோசமான பாதிப்பில் உள்ளாகியிருந்தது. தற்போது மெதுமெதுவாக அத்தாக்கம் கல்முனை மாநகருக்குள் தாவுகின்றதுபோல் தெரிகிறது.

வெள்ளிக்கிழமை நண்பகல் வரை 50 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி தொற்றாளர்கள் விபரம் வருமாறு : கல்முனை தெற்கு - 33 பொத்துவில் - 8 சாய்ந்தமருது - 1 ஆலையடிவேம்பு -3 அக்கரைப்பற்று - 3 வாழைச்சேனை -1 திருகோணமலை-1

இதன்படி கிழக்கு மாகாணத்தில் கொரோனாத்தொற்றுகளின் எண்ணிக்கை 746 ஆக அதிகரித்துள்ளது .அதேவேளை கல்முனைப்பிராந்தியத்தில் அதிகூடிய 583பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அந்தப்பிராந்தியத்தில் புதிதாக உருவான அக்கரைப்பற்றுக் கொத்தணி மூலமாக இதுவரை 541பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

கல்முனை தெற்கில் 75பேருக்கு தொற்று
அக்கரைப்பற்றை அடுத்து கல்முனையில் கொரோனாத்தொற்று திடீரென அதிகரித்துள்ளது. குறிப்பாக கல்முனை தெற்கில் மொத்தமாக 75பேர் இனங்காணப்பட்டுள்ளனர். சாய்ந்தமருதில் 19பேரும் ,கல்முனை வடக்கில் 9 பேரும் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனால் கல்முனை பல பகுதிகள் நேற்றுமுதல்(18) தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையடுத்து தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வெறிச்சோடிக்காணப்படுகின்றது.

இதனால் நேற்று கல்முனையின் சிலபகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. மீண்டும் கல்முனைக்குடி முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிரதான சந்தையும் மூடப்பட்டுள்ளதுடன் அங்குள்ள உணவகங்கள் இரவு 8 மணியுடன் மூடப்படவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ந அங்குள்ள பாடசாலைகள் அரச அலுவலகங்கள் வர்த்தகநிலையங்கள் உணவகங்கள் அனைததும் மூடப்பட்டிருந்தன. அப்பகுதிகளில் சுகாதாரத்துறையினர் பிசிஆர் அன்ரிஜன் சோதனையீலீடுபட்டனர்.

கொவிட் தடுப்பு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீர்மானம்.!

கல்முனை நகரம் மற்றும் கல்முனைக்குடி பிரதேசம் உட்பட கல்முனை ஸாஹிராக் கல்லூரி வீதி தொடக்கம் ரெஸ்ட் ஹவுஸ் வீதி வரையான அனைத்து பிரதேசங்களும் வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) நள்ளிரவு வரை தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.

கல்முனை மாநகர சபையில் வியாழக்கிழமை மாலை 6.00 மணியளவில் மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற கொவிட் தடுப்பு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை செய்லான் வீதி தொடக்கம் மாதவன் வீதி வரையான பிரதேசங்கள் வியாழக்கிழமை (17) காலை 6.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் அதனை மேலும் விஸ்தரித்து கொவிட் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கல்முனை நகரத்தின் ஒரு பகுதி பஸார் பொதுச் சந்தைகள் மற்றும் கல்முனைக்குடி பிரதேசம் முழுவதும் உள்ளடங்கலாக ஸாஹிராக் கல்லூரி வீதி தொடக்கம் ரெஸ்ட் ஹவுஸ் வீதி வரையான அனைத்துப் பிரதேசங்களும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) நள்ளிரவு வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்கும் என்பதுடன் அதனை தொடர்வதா அல்லது விடுவிப்பதா என்பது குறித்து அன்றைய தினம் மாலை நடைபெறவுள்ள ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இந்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் டாக்டர் அர்சாத் காரியப்பர்இ கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த கல்முனை பிராந்திய இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் எம்.தர்மசேன கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.ரிஸ்னி கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆர்.கணேஸ்வரன் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.அஜ்வத் கல்முனை வர்த்தக சங்கத் தலைவர் கே.எம்.சித்தீக் செயலாளர் எஸ்.எல்.ஹமீட்கல்முனை சந்தை வர்தக சங்க செயலாளர் ஏ.எல்.கபீர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :