அட்டாளைச்சேனை 8 ஆம் பிரிவில் கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து அப்பிரிவு இன்னும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் கீழ்

பைஷல் இஸ்மாயில் -

ம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை 8 ஆம் பிரிவில் கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து அப்பிரிவு இன்னும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் அமுலில் இருந்து வருகின்றது.

குறித்த பிரிவில் வசிக்கும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் நோய் எதிர்ப்பு மருந்துப் பொதியை வீட்டுக்கு வீடு வழங்கும் செயற்திட்டம் இன்று (19)
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலைக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதரின் ஆலோசனைகளுக்கமைவாக இந்த வேலைத் திட்டம் அம்பாறை மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கல்முனை பிராந்தியத்துக்கான செயற்திட்டத்தை பிராந்திய ஆயர்வேத இணைப்பாளரும் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான எம்.ஏ.நபீல் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த முன்னெடுப்பு நடவடிக்கையில், அட்டாளைச்சேனை தள ஆயர்வேத வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி எம்.பி.எம்.றஜீஸ், வைத்தியர் எஸ்.அப்துல் ஹை மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்த செயற்திட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்ட பிரதேசத்தில் கடமையாற்றும் இலங்கை இராணுவத்தினருக்கும் நோய் எதிர்ப்பு மருந்துப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :