டயானாவை கைவிடுகிறார் சஜித் பிரமதாஷ!

M.I.இர்ஷாத்-

க்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவை, கட்சியிலிருந்து விலக்குவதற்கு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தீர்மானித்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.

20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த டயானா கமகே தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு, நிறைவேற்று குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்தே, டயானா கமகேவை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு சஜித் பிரேமதாஸ தீர்மானித்துள்ளார்.

20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஏனைய 7 பேர் தொடர்பிலான தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு, அந்தந்த கட்சிகளின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கட்சிகளின் தலைவர்கள் தமது தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழுவிற்கு விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :