கோட்டபாயவின் அரசு மூடநம்பிக்கையாளர்களால் நிறம்பியுள்ளது -மனுஷ நாணயக்கார

னாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளது. அறிவியல் ரீதியாக கொரோனாவை ஒழிக்க வேண்டிய நிலையில், அரசாங்கத்தின் அமைச்சர்கள் மூட நம்பிக்கைகளை பரப்பி, அதன் பின்னால் செல்கின்றனர்.

இரண்டு நாட்களுக்கு மாத்திரம் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் எனக் கூறியதால், மக்கள் இரண்டு நாட்களுக்கு தேவையான பொருட்களை மாத்திரமே கொள்வனவு செய்திருந்தனர். திடீரென தற்போது ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதால் மக்களால் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்னர் வப் போயா தினத்தில் செய்த அறுவடையை வீட்டுக்கு கொண்டு செல்ல நேரிட்டுள்ளது. களனி விகாரையில் அதனை அறுவடை செய்தனர்.

பிறந்தது முதல் செய்த பாவங்கள் ஒரு முறை களனி விகாரைக்கு சென்று வணங்கினால் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. அன்று களனி கங்கையை பிளந்து கொண்டு நாகம் வந்தது. மேட் இன் சைனா என்று எழுதப்பட்டிருந்த புனித தந்தத்தை எடுத்துக்கொண்டே அந்த நாகம் வந்தது.

நாகம் தந்தத்தை எடுத்து வந்தது என்று கூறி களனி விகாரை அவமதித்த அரசாங்கம் தற்போது அதனை அறுவடை செய்து வருகிறது. பௌத்த தர்மத்தை அவமதித்து ஆரம்பித்த பயணம் தற்போது தோல்வியை நோக்கி சென்றுள்ளது.

தற்போதைய அரசாங்கம் மூட நம்பிக்கைகளை பரப்பி, பொய்களை கூறி, இலவசமாக உரத்தை தருவதாகவும் உணவு பொதி வழங்கப்படும் என்றும், ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனக் கூறியே ஆட்சிக்கு வந்தது.
அரசாங்கம் மீண்டும் மூட நம்பிக்கைகளை பரப்ப ஆரம்பித்துள்ளது. கல்விமான்களுடன் கூடிய அரசாங்கத்தை அமைக்க போவதாக கூறினர். கல்விமான்கள் அரசாங்கத்திற்கு வருவார்கள் என கூறினர். இப்படி கூறிய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் விஷ்வ சக்தி இருப்பதாக கூறி தண்ணீர் கலவசத்தை ஆற்றில் போடுகிறார்.
உதய கம்மன்பில, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் களனி கங்கையில் தண்ணீர் கலசங்களை போகின்றனர். மூட நம்பிக்கையில் இருந்து விடுப்பட்டு அறிவியலை நோக்கி செல்ல வேண்டிய காலத்தில் இவர்கள் மூட நம்பிக்கையை நோக்கி செல்கின்றனர்.

இப்படியான மூட நம்பிக்கை மூலமே அன்று 69 லட்சம் மக்களை ஏமாற்றினர். மீண்டும் ஒரு முறை மூட நம்பிக்கையில் மக்களை ஏமாற்றவே அரசாங்கம் முயற்சித்து வருகிறது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :