மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்திலுள்ள வீடொன்றில் நடைபெற்ற சமயநிகழ்வில் பங்கேற்ற இருவருக்கு கொரோனா தொற்று


க.கிஷாந்தன்-

ஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்திலுள்ள வீடொன்றில் நடைபெற்ற சமய நிகழ்வில் பங்கேற்ற இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (04.11.2020) உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மஸ்கெலியா, பிரவுன்லோ தோட்டத்தில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களிடம் கடந்த 2 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. இந்நிலையில் இன்று பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின.

இதில் மஸ்கெலியா ஓல்டன் தோட்டத்தில், கிங்கோரா பிரிவைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவருக்கும், பிரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஆணொருவருக்கும் கொரோனா தொற்றியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மஸ்கெலியா, பிரவுன்லோ தோட்டத்தில் உள்ள பேலியகொடை மீன் சந்தையில் பணிபுரிந்த நபரொருவரின் வீட்டில் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற சமய நிகழ்வில் இவர்கள் பங்கேற்றுள்ளனர். அதன் மூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி மஸ்கெலியா பகுதியில் இதுவரை 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளான இருவரும் கடும் சுகாதார பாதுகாப்புடன் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :