முறையற்ற கார்ப்பட்வீதி: மக்கள் புகார்:தடுத்து நிறுத்தினார் தவிசாளர்!மாகாணப்பணிப்பாளரின் உறுதிமொழியால் பிரச்சினைதீர்ந்தது.


காரைதீவு சகா-

கா
ரைதீவு தேசிகர் வீதி முறையற்றவிதத்தில் கார்ப்பட்வீதியாக செப்பனிடப்படுவதாக கிடைத்த முறைப்பாடுக்களுக்கமைவாக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் உடனடியாக ஸ்தலத்திற்குவிரைந்து வேலையை தடுத்து நிறுத்தினார்.

இச்சம்பவம் நேற்று(3)மாலை இடம்பெற்றது.அங்கு பொதுமக்களும் திரண்டு நின்றனர்.

இவ்வீதி 5மீற்றர் அகலமாயிருந்தபோதிலும் நடுவே 3மீற்றருக்கு மட்டும் கார்ப்பட் இடப்படுகின்றது.இருமருங்கிலும் கிறவல் இட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு பக்கத்தி;ல் வடிகானுள்ளது. அந்தகான் வரைக்குமாவது கார்ப்பட் போட்டுத்தரவேண்டுமென்பது வீதியிலுள்ள குடியிருப்பாளர்களின் கோரிக்கையாகும்.

காரைதீவு பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட முக்கிய பிரதான உள்ளுர் வீதியான 1.72கி.மீற்றர் நீளமான தேசிகர் வீதி கார்ப்பட் வீதியாக செப்பனிடுகின்றபணி முறையற்றவிதத்தில் நடைபெறுவதாக பொதுமக்கள் எழுத்துமூலமும் வாழ்மொழிமூலமும் முறைப்பாடு செய்திருந்தனர்.

இக்கோரிக்கையை முன்கூட்டியே பிரதேசசபைத்தவிசாளர் உரிய தரப்பினருக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும் நடுவே 3மீற்றர் போடுவதிலேயே ஒப்பந்தகாரர்கள் குறியாகஇருந்தனர்.
எனவே மக்களின் கோரிக்கை தொடர்பாக குறித்த ஒப்பந்த அதிகாரிகள் நிபுணத்துவஅதிகாரிகளுக்கும் தவிசாளருக்குமிடையே கலந்துரையாடல் நடைபெற்றபோதும் சரியான தீர்வு கிடைக்காமையினால் வீதி அமைப்புவேலையை நிறுத்தினார் தவிசாளர். அவருடன் பிரதேசசபை உறுப்பினர் த.மோகனதாசும் வந்திருந்தார்.


சுமார் இருமணிநேரம் வீதியமைப்புப்பணிகள் ஸ்தம்பிதமாயின.ஏகப்பட்ட கனரக வாகனங்கள் அப்படியே நின்றன.பணியாட்களும் நின்றனர்.

அந்த இடத்திலும் பொதுமக்கள் கையெழுத்துவேட்டை நடாத்தி பாதை வடிகான்வரைக்குமாவது அகலமாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகளின் முன்னிலையில் தவிசாளரிடம் கையளித்தனர்.

அதேவேளை தவிசாளர் உரியஅதிகாரிகளோடு தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு மக்களின் முறைப்பாட்டைக்கூறி அதற்குப்பரிகாரம் தந்தால் மட்டுமே வீதியமைப்பு வேலைகளைத் தொடரலாம் என்று கூறினார்.

வீதி அபிவிருத்திஅதிகாரசiபின் ஜ வீதித்திட்ட கிழக்கு மாகாணப்பணிப்பாளர் பொறியியலாளர் த.பத்மராஜா கல்முனைப்பிராந்திய பொறியியலாளர் எஸ்.பரதன் ஆகியோரோடு கலந்துரையாடினார்.

குறித்தவீதி புனரமைக்கப்படவேண்டும் என்று இத்திட்டத்தை தானே கொண்டுவந்ததாகவும் தனது ஆளுகைக்குட்பட்ட வீதியாகவிருந்தும் தனக்கோ இப்பகுதி மக்கள் பிரதிநிதிகளுக்கோ மக்களுக்கோ தெரியாமல் இவ்வாறு முறையற்றவிதத்தில் போடுவதை அனுமதிக்கமுடியாது .அப்படிப்பட்ட அரைகுறைவீதி எமக்குத் தேவையில்லை என்று காரசாரமாக விவாதித்தார்.

இறுதியில் மாகாணபணிப்பாளர் த.பத்மராஜா தவிசாளரின் வேண்டுகோளை ஏற்று குறித்த எஞ்சியபகுதியையும் கார்ப்பட் இட்டுத்தருவதாக வாக்குறுதியளித்தார்.

வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டதன் பிற்பாடு வீதிப்பணிகளை தொடர அனுமதித்தார். அந்தஇடத்திலேயே ஊடகங்களுக்கும் தவிசாளர் கருத்துதெரிவித்தார்.
சுமார் இருமணிநேரத்தின்பின்னர் மாலை 6.30மணியளவில் ஒப்பந்தக்காரர்கள் மீண்டும வீதிப்புனரமைப்புப் பணிகளைத் தொடர்ந்தனர்.11 AttachmentsReplyReply allForward

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :