சிகையலங்கார நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறு தவிசாளர் உத்தரவு. மரக்கறி மீன் ஜஸ் இரும்பு தும்பிமிட்டாய் வியாபாரங்களுக்கும் தடை!



காரைதீவு நிருபர் சகா-

க்கரைப்பற்று கொரோனாத் தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து காரைதீவில் சிகையலங்கார நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறு காரைதீவு பிரதேசபைத்தவிசாளர் கி ருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அறிவித்துள்ளார்.

பிரதேசத்தில் பரவிவரும் கொரோனாத்தொற்றிலிருந்து பாதுகாக்குமுகமாக காரைதீவுப்பகுதியில் மரக்கறி வியாபாரம் மீன்வியாபாரம் ஜஸ்பழவியாபாரம் தும்புமிட்டாய்வியாபாரம் இரும்புவியாபாரம் அங்காடி வியயாபாரம் செய்வதும்முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கான தீhமானம் பிரதேச கொரோனா வழிகாட்டல் குழுவின் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான வியாபாரம் இடம்பெற்றால் பொதுமக்கள் பின்வரும் இலக்கங்கங்களுடன் தொடர்புகொண்டு முறையிடலாம். தவிசாளர் 0773100852 செயலாளர் 0760965641 தொழினுட்பவியலாளர் 0774961435 வருமானபரிசோதகர் 0772634100.

மீறுவோருக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென்று தவிசாளர் ஜெயசிறில் ஒலிபெருக்கிவாயிலாக அறிவித்தல் விடுத்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :