இவர்களால் நாட்டுக்கும் மக்களுக்கும் கெடுதியாகும். யாசகம் கேட்போருக்கு பலரும் கொடுப்பதால் இது நல்ல தொழில் என யாசிப்போர் கூடிவிட்டனர்.
30 வருடங்களுக்கும் முன் யாசிப்போர் சிலர்தான் வீடுகளுக்கு வருவர். இப்போது காலை 7 மணியிலிருந்தே யாசகர்கள் படை எடுக்கிறார்கள்.
பள்ளிவாயல்கள் முன்பு தொழுவோரின் எண்ணிக்கையை விட யாசிப்போர் தொகை கூடிவிட்டது. கொடுப்பவர்கள் அதிகமாகியதால் கேட்போர் கூடிவிட்டது.
அதனால் யாசகம் கொடுப்பதும் குற்றம் என்ற பொலிஸ் மாஅதிபரின் கருத்து வரவேற்கத்தக்கதாகும்.
அத்துடன் யாசகம் கேட்கும் அனைவர் பற்றியும் அரசாங்கம் தகவல் திரட்டி உண்மையான யாசிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தொழில் இல்லாதோருக்கு ஒரு லட்சம் தொழில் வாய்ப்பில் முன்னுரிமை கொடுத்து விட்டு யாசிப்பதை முற்றாக தடை செய்ய வேண்டும்.

0 comments :
Post a Comment