உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் நாவிதன்வெளி பிரதேசத்தில் 17 வீடுகள் உத்தியோகபூர்வமாக கையளிப்பு



பாறுக் ஷிஹான்-

திமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் நாட்டினை உருவாக்கும் சௌபாக்கியத்தின் நோக்கு என்ற கொள்கைக்கு அமைய பிரதமரின் வழிகாட்டுதலில் உருவான 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 20 கிராம் சேவையாளர் பிரிவில் மூன்றாம் கட்டமாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட 17 வீடுகள் பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று(1) இடம்பெற்றது.

இவ் புதிய வீடுகளுக்கான நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் தலைமையில் நடப்பட்டிருந்ததுடன் இப்புதிய வீட்டு நிர்மாணம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மானிய நிதியுதவியின் கீழ் ஆறு இலட்சம் ரூபாவினை வழங்கி இருந்தது.

இதற்கமைய நிரந்தர வீடில்லாத வறுமைக் கோட்டின் கீழ் உள்ள சமூர்த்தி பெறும் ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்து கொடுக்கும் அரசின் இவ் வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வீடமைப்பு நிர்மாணத்திற்கான குறித்த பயனாளியின் சொந்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட 17 வீடுகள் பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் , நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என். நவநீதராஜா, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஏ.பி ஐராங்கனி ,தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக முகாமையாளர் ஏ.எம் இப்ராஹிம், நிருவாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித் ,சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ் .சிவம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நாவிதன்வெளி பிரதேச செயலக தொழிநுட்ப உத்தியோகத்தர் மோ.ஜயபோசன் ,அந்த அந்த பிரிவு கிராம சேவையாளர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பயனாளி குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இவ் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 20 கிராம் சேவையாளர் பிரிவில் சாளம்பைக்கேணி -1 ,2 சொறிக்கல்முனை1 ,2 மத்திய முகாம் -2 ,4 அன்னமலை -1 , 3 உள்ளிட்ட 17 பயனாளிகளுக்கு இன்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிதாக கட்டப்பட்ட ஒவ்வொரு வீட்டின் அருகே தலா 3 பயன்தரு மரங்களும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :