தற்போது கொரோனா பரவிய Brandix ஆடைத்தொழிற்சாலை- பல நாடுகளில் கிளைகள்J.f.காமிலா பேகம்-
பிரன்டிக்ஸ்( Brandix) ஆடைத்தொழிற்சாலை பற்றி தற்போது பிரபல்யமாக பேசப்படுகிறது.Brandix apprel limited என்றபெயரில் இது இலங்கையில் பிரதான ஆடைத்தொழிற்சாலையாக விளங்குறது.இலங்கையின் பிரபல ஆடை தயாரிக்கும் நிறுவனங்ங்களில் இதுவும் ஒன்று! இந்த நிறுவனத்தின் பிரதான நிறுவனங்கள் இந்தியா மற்றும் பங்ளாதேஷில் இயங்குகின்றன.ஐக்கிய அமெரிக்கா, ஹெய்டி,சிங்கப்பூர் ,கம்போடியா,அவுஸ்திரேலியா,ஐக்கிய ராச்சியம் போன்றஇடங்களில் இதன் கிளைகள் உள்ளன.பிரன்டிக்ஸ் என்ற பெயரிலேயே இந்த தொழிற்சாலைகளின் 38 கிளைகள் தொழிற்படுகின்றன.இவற்றில் 60000க்கு மேற்பட்ட தொழிலாளகள் வேலை செய்கின்றனர்.விக்டோரியாஸ்,கெப்,நெக்ஸ்ட்,மாக்ஸ் என்ட் ஸ்பென்சர் போன்ற விசேட நிறுவனங்களுக்கு , இந்த தொழிற்சாலையிலேயே உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.துணிகைககள்,நூல் வகைககள்,பட்டன்கள்,ஹெங்கர்கள் போன்ற தரம் வாய்ந்தவையாக பயன்படுத்தப்படுகிறது.
ப்ரடிக்ஸ் நிறுவனம் இலங்கையில் பாரிய ஆடை ஏற்றுமதி நிறுவனமாகும் .வருடாந்த வருமானம் கிட்டடத்ததட்ட 600 மில்லியன் டொலர் ஆகும். இலங்கையின் பொருளாதாரத்தில் தேசிய. உற்பத்திமூமூலம் பெருமளவு வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித்ததருவதில் இந்நிறுவனத்துக்கு பெரும்பங்குண்டு .கடந்த காலங்களில் பல்வேறு விருதுகள் இந்நிறுவனம் தனதாக்கி பெருமை சேர்த்துள்ளது.1969 ம் ஆண்டு இந்நிறுவனம் காலடி பதித்தபோது,
.බ්..1972ம் ஆண்டு பாகிஸ்தான் ஒமர்சமூகத்தின் ஒரு கிளையாக ஆரம்பிக்கப்பட்டது.
2007 இல .7 நிறுவன சட்டத்தின் கீழ் பிரன்டிக்ஸ் தனியார் நிறுவனம் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாக பதியப்பட்டது.2008 ஆண்டு சீதுவை என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டு பின் மீரிகமை,மட்டக்களப்பு,பன்னலை போன்ற இடங்கல் கிளைநிறுவனங்கள் தாபிக்கப்பட்டன.தற்போது இதன் பணிப்பாரா அஷ்ரப் ஒமர் கடமையாற்றுகிறார் .தலைவராக ப்ரியான் பெனானன்டோ கடமையாற்றுகிறார்.
இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தில் விஷாக்கா பட்டினத்தில் 1000 ஏக்கரில் கைத்தொழில் நகரமாக "பிராண்டிக்ஸ் இந்தியன் எப்பரல் சிட்டி" என்ற பெரிய ஆடை உற்பத்தி தொழிலகம் அமைக்கப்பட்டு இயங்குகிறது. பீரண்டிக்ஸ் தொழிற்சாலையின் தாயக கிளை இலங்கையில் இயங்கினாலும் , இந்தியா போன்ற ஏனைய கிளைகளுடன் நநிரந்தர கொடுக்கல் வாங்கல்கல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.அதிகாரிகள் மட்டத்தில் சந்திப்புகள் எப்போதும் இடம்பெறுவதுண்டு. கொரோனாதொற்று ஏற்பட காரணம் இந்தியாவிலிருந்து இந்த நிறுவனத்துக்கு வந்தவர்களாலேயே என பரவலான கதைகள் சமூக ஊஊடகங்களில் பரவி உள்ளது.ஆயிினும் அப்படி யாரும் வரவில்லை எஎன நிறுவனம் மறுத்துள்ளது.இதே வேேளை இஇந்நநிறுவனத்தை சேர்ந்த சுமார் 250 பேர் கொரொனா பரவல் காரணமாக தலைமறைைவாகி உள்ள்தாக ராணுவ தளபதி ஷைவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :