மாளிகைக்காடு மையவாடி விவகாரத்தில் பிரதமர், மற்றும் ஹரீஸ் எம்பிக்கும் பாராட்டுக்கள் உலமா கட்சி தலைவர்

பா
ராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ஹ‌ரீஸ் விடுத்த‌ வேண்டுகோளுக்கிண‌ங்க‌ காரைதீவு பிரதேச மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா மையவாடி தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஜனாஸாக்களுக்கு உரிய கௌரவத்தை வழங்குமாறு கரையோரம் பேணல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பணிப்புரை விடுத்தமைக்காக‌ உல‌மா க‌ட்சி பிர‌த‌ம‌ரை பெரிதும் பாராட்டியுள்ள‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதினால் பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வுக்கு அனுப்பியுள்ள‌ க‌டித‌த்தில் மேலும் தெரிவித்துள்ள‌தாவ‌து,

அண்மைக்கால‌மாக‌ உச்சகட்ட கடலரிப்புக்கு இலக்காகி பகுதிளவில் இடிந்து விழுந்த மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா மையவாடி தொடர்பிலும் ஒலுவிலில் ச‌ரியான‌ திட்ட‌த்துட‌ன் ஏற்பாடு செய்ய‌ப்ப‌டாத‌ ஒலுவில் துறைமுக‌ம் கார‌ண‌மாக‌ அப் பிரதேச கடலரிப்பின் பாதிப்புக்களால் ம‌க்க‌ள் பாரிய‌ பிர‌ச்சினைக‌ளுக்கு முக‌ம் கொடுக்கிறார்க‌ள்.

கடலரிப்பு காரணமாக அந்த ஜனாஸா மையவாடி சுவர் பகுதியளவில் இடிந்து விழுந்தது. மேலும் சுவர் இடிந்து விழாமல் காக்க அப்பிரதேச மக்களால் மணல் மூட்டை கட்டிப்போட்டும் தற்காலிக‌ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டும் அது பாரியளவில் வெற்றியளிக்கவில்லை.

இது ப‌ற்றி ஹ‌ரீஸ் எம் பி பிர‌த‌ம‌ரின் க‌வ‌ன‌த்துக்கு கொண்டு வ‌ந்த‌ போது அவ‌ர் எதிர்க்க‌ட்சி எம் பியாக‌ இருந்தும் அவ‌ர் ம‌க்க‌ள் பிர‌திநிதி என்ப‌தை உண‌ர்ந்து அவ‌ர‌து கோரிக்கையை க‌வ‌ன‌மாக‌ கேட்ட‌துட‌ன் அத‌ற்குரிய‌ உட‌ன‌டி ப‌ணிப்புரையை விடுத்த‌த‌ன் மூல‌ம் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ அனைவ‌ருக்குமான‌ பிர‌த‌ம‌ர் என்ப‌தைக்காட்டியுள்ளார்.

ஒலுவில், நிந்த‌வூர், சாய்ந்த‌ம‌ருது பிர‌தேச‌ங்க‌ளில் க‌ட‌ல‌ரிப்பு என்ப‌து ப‌ல‌ வ‌ருட‌மாக‌ ந‌ட‌ந்து கொண்டிருக்கும் துன்ப‌மாகும். அம்பாரை மாவ‌ட்ட‌ முஸ்லிம்க‌ள் 95 வீத‌ம் வாக்க‌ளித்து கொண்டு வ‌ந்த‌ அர‌சின் பிர‌த‌ம‌ரும் அந்நாளைய‌ கெபின‌ட் அமைச்ச‌ரான‌ ர‌வூப் ஹ‌க்கீமும் இவ‌ற்றுக்குரிய‌ தீர்வுக‌ளை கொஞ்ச‌மும் முன்னெடுக்க‌வில்லை. அன்றைய‌ பிர‌த‌ம‌ர் ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ முஸ்லிம் பிர‌தேச‌ங்க‌ளின் பிர‌ச்சினைக‌ளை தீர்க்க‌ எந்த‌ முய‌ற்சியும் செய்வ‌தில்லை என‌ ஹ‌ரீஸ் எம்பியும் அடிக்க‌டி ஊட‌க‌ங்க‌ளில் சொல்லியிருந்தார்.

ஆனாலும் முஸ்லிம்க‌ளின் அதிக‌ வாக்குக‌ள் பெறாத‌ நிலையிலும் அதை ம‌ன‌தில் இருத்தாம‌ல் இது விட‌ய‌த்தில் உட‌ன‌டி ந‌ட‌வ‌டிக்கைக்கு உத்த‌ர‌விட்ட‌ பிர‌த‌ம‌ர் பெரிதும் ந‌ன்றிக்குரியவ‌ராவார் என‌ முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :