காலநிலை மாற்றங்கள் - அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் பாதிப்பு


பாறுக் ஷிஹான்-

ங்களா விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவுகிறது.

இதனால் இன்று(9) அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.காலை முதல் மாலை வரை மப்பும் மந்தாரமுமாக இருந்த நிலையில் இடையிடையே சிறிய மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மருதமுனை பாண்டிருப்பு பெரியநீலாவணை சாய்ந்தமருது அட்டாளைச்சேனை நிந்தவூர் ஒலுவில் பொத்துவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு காற்றின் திசை மாற்றம்இ நீரோட்டத்தில் ஏற்ப்பட்டுள்ள திசை மாற்றம் கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுகின்ற காரணங்களால் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதினாலும் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக இவ்வாறான காலநிலை மாற்றங்களினால் கடலரிப்பு அதிகமாக ஏற்படுவதினாலும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் எதிர்வரும் 3 நாட்களுக்கு கடலில் அலை வீரியம் அதிகரிப்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :