இலங்கையில் 5 ஆண்டுகளில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 206 பேர் கைது!


M.I.இர்ஷாத்-

லங்கையில் கடந்த ஐந்தாண்டுகளில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பில், 4 லட்சத்து 70 ஆயிரத்து 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (9) ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி., ஹேஷா விதானகேவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

” சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பில் 2015 ஆம் ஆண்டு 73 ஆயிரத்து 444 பேரும், 2016 இல் 75 ஆயிரத்து 304 பேரும், 2017 இல் 81 ஆயிரத்து 156 பேரும், 2018 இல் 96 ஆயிரத்து 489 பேரும், 2019 இல் 89 ஆயிரத்து 308 பேரும், 2020 செப்டம்பர் 18ஆம் திகதிவரை 54 ஆயிரத்து 505 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை பொலிஸ், இலங்கை சுங்கம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இராணுவம், கலால் திணைக்களம் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் ஆகியன
சட்டவிரோத போதைப்பொருள் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.

இதில் இலங்கை பொலிஸாரால் மேற்படி காலப்பகுதியில் 40 ஆயிரத்து 751 கிலோ சட்டவிரோத போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.” – என்றும் அமைச்சர் சமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :