M.I.இர்ஷாத்-
கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையம் நேற்று மூடப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கோட்டை பொலிஸ் நிலையம் இயங்கிவரும் கட்டிடத் தொகுதியிலுள்ள மேல் மாகாண விசேட விசாரணைப் பிரிவு அதிகாரியான பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கட்டிடம் தொற்றுநீக்கலுக்காக மூடப்பட்டது.
மேலும் அங்கு பணிபுரிந்துவந்த 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் பொலிஸ் நிலையம் மீண்டும் இன்று காலை திறக்கப்பட்டது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment