உறுப்பினர்களின் கோரம் இல்லாத காரணத்தினால் ஏறாவூர் நகர சபை அடுத்த மாதம்வரை ஒத்திவைப்புஏறாவூர் நிருபர் எம்ஜிஏ நாஸர்-

றுப்பினர்களின் கோரம் இல்லாத காரணத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் நகர சபையின் 31 ஆவது சபை அமர்வு அடுத்த பதினைந்து நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகர சபையின் இம்மாத அமர்வு இன்று 27.10.2020 காலை 10 மணிக்கு சபை முதல்வர் ஐ. அப்துல் வாசித் தலைமையில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.
ஐந்து நிமிடங்கள் கடந்தபோதிலும் இச்சபையின் 17 உறுப்பினர்களில் முதல்வர் உட்பட ஐந்து உறுப்பினர்கள் மாத்திரமே சமுகமளித்திருந்தனர்.

இச்சபைக்கு குறைந்தது ஆறு உறுப்பினர்களின் பிரசன்னத்தைக்கொண்டே சபை அமர்வு நடைபெறவேண்டும் என்பதனால் முதல்வர் அப்துல் வாசித் சபையினை ஒத்திவைக்கும் அறிவிப்பைச் செய்ததுடன் அடுத்த பதினைந்து நாட்களுக்குள் மீண்டும் சபை கூடுகின்ற திகதி அறிவிக்கப்படும் என்றார்.

இங்கு சபை முதல்வர் அப்துல் வாசித் கருத்துத் தெரிவிக்கையில் - இச்சபை திறமையாக நிருவகிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே கடந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களித்து உறுப்பினர்களைத் தெரிவுசெய்துள்ளனர். ஆனபோதிலும் தனிப்பட்ட காழ்ப்புணர்வு காரணமாக சபையின் நடவடிக்கைகளை முடக்க முயற்சிசெய்வது வேதனைக்குரியது.

அதுவும் கொரோனா அச்சம் நிலவுகின்ற இக்காலகட்டத்தில் மக்களது நலன்களைக் கருத்திற்கொண்டு பல்வேறு தீர்மானங்களை எடுத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டிய நிலையில் சபையினை பகிஷ்கரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் என்றார்.

உறுப்பினர் யு.ஏ. றஸீட் கருத்துக் கூறுகையில்

அண்மையில் இச்சபையின் வரவு-செலவு திட்டத்திற்கு எதிர்த்து வாக்களித்து தோற்கடித்தவர்கள் நியாயமான காரணங்களை முன்வைத்தால் நானும் அவர்களுடன் இணைந்துசெயற்படத் தயாராக இருக்கிறேன். வரவு- செலவுத்திட்டத்தை தோற்கடிப்தற்கோ முதல்வரை மாற்றுவற்கோ நியாயமான காரணங்களை முன்மொழிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கடந்த 12 ஆந்திகதி இச்சபையின் வரவு- செலவுத்திட்டம் தோற்கடிக்கபட்டடமை குறிப்பிடத்தக்கது. 17 உறுப்பினர்களில் 12 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.

ஏறாவூர் நகர சபை ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களது ஆளுகையில் உள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :