இலவச முகக்கசவம் வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடியில்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

நாட்டில் ஏற்பாட்டுள்ள கொரோணா வைரஸ் பாதுகாப்பு தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ரி.லதாகரன் வழிகாட்டலில் சமூகசேவையாளர் கலாநிதி எம்.பி.எம்.முஸம்மில் தலைமையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் முகக்கசவம் அணியாது செல்லும் நபர்களுக்கு கொரோணா வைரஸ் பாதுகாப்பு கருதி முகக்கசவம் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை ஓட்டமாவடி பிரதான வீதியில் இடம்பெற்றது.

இதில் ஓட்டமாவடி பிரதேச செயலகம், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், வாழைச்சேனை பொலிஸ் நிலையம், கிழக்கு மாகாண இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து மக்களுக்கு பாதுகாப்பு கருதி முகக்கவசம் வழங்கி வைக்கப்பட்டதுடன், உடல் வெப்பநிலையும் பரிசோதனை செய்யப்பட்டது.

இதன்போது முகக்கவசம் அணியாது பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் உட்பட்ட வாகனங்களில் பயணம் செய்யும் மக்களுக்கு கொரோணா வைரஸ் தாக்கம் தொடர்பில் கருத்துக்கள் வழங்கப்பட்டது.

குறித்தி நிகழ்வில் சமூகசேவையாளர் கலாநிதி எம்.பி.எம்.முஸம்மில், ஓட்டமாவடி பிரதேச செயலக கணக்காளர் அஹமட சஜ்ஜாத், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்சாப்;, ஓட்டமாவடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்கள், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :