கின்னஸ் சாதனை படைக்கும் உலகின் நீளமான கால்களைக் கொண்ட இளம்பெண்!

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

லகின் நீளமான கால்களைக் கொண்ட 17 வயது இளம் பெண் கின்னஸ் சாதனை படைக்கவிருக்கிறார்.

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தின் சிடார் பார்க்கைச் சேர்ந்த மேசி கர்ரின் என்ற இளம் பெண்ணின் இடது கால் 135.26 cm, வலது கால் 134.3 cm நீளமும் கொண்டதால் உலகின் மிக நீண்ட கால்கள் என்று அடுத்த ஆண்டு கின்னஸ் சாதனை படைக்கவிருக்கிறார்.

இவரது கால்கள் மட்டுமே 1½ அடி நீளம் கொண்டவை. இவருடன் பிறந்த சகோதர , சகோதரிகள் இருந்தாலும் மேசி மட்டும்தான் உயரமானவராக காணப்பப்பட்டு ஆச்சர்யமளிக்கிறார். இவரது, உயரத்தை கதிரை போட்டு நின்றால்தான் எட்ட முடிகிறது.

”எனக்கு நீண்ட கால்கள் இருப்பது சவாலாக இருக்கிறது. சில இடங்களில் கதவுகளைத் திறந்து நுழைவது, காரில் ஏறுவது, உயரத்திற்கேற்ற ஆடைகள் கிடைப்பது கடினம் என்றாலும் எனக்கு பெருமையாகத்தான் இருக்கிறது.

ஆனால், எனது பாடசாலையில் கூடைப்பந்து விளையாடும்போது, இலகுவாக இருக்கிறது” என்று புன்னகையோடு கூறும் மேசி டிக்டாக்கில் மிகவும் பிரபலமாகவுள்ளார். கின்னஸ் சாதனையோடு மொடலிங் உலகில் நுழைந்து ’உலகின் உயரமான மொடல்’ என்ற சாதனையையும் படைக்கவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :