வீதிகளில் இராணுவத்தினர் பொதுமக்களை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்!

காரைதீவு  சகா-

மகால கொரோனா அபாயம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சகல பாகங்களிலும் இராணுவத்தினர் வீதிகளில் நின்று பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

வாகனங்களில் குறிப்பாக மோட்டர்சைக்கிளில் முகக்கவசமின்றி பயணித்தால் இராணுவத்தினர் அதனை நிறுத்தி எச்சரிக்கிறார்கள்.

அதேவேளை பஸ் ஆட்டோ தொடக்கம் அனைத்தையும் நிறுத்தி முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வு அறிவூட்டலும் செய்துவருகின்றனர்.

அம்பாறை மாவட்டஅரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலமையில் நடைபெற்ற கூட்டத்தில் முகக்கவசமின்றி வெளியில் நடமாடக்கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது தெரிந்ததே.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா மூன்றாவது அலையின் பீதி மக்கள் மத்தியில் பலமாக குடிகொண்டுவருகிறது.

அம்பாறைமாவட்டத்தில் இருவர் புதிதாக தொற்றுக்குள்ளாகியிருக்கும் நிலையில் மக்களை முகக்கவசம் அணியுமாறு நேற்று இராணுவத்தினர் பரவலாக கல்முனைப்பிராந்தியமெங்கும் வலியுறுத்தினர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :