இலங்கையில் கொரோனா பரவலின் வேகம் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கொழும்பில் நேற்று பிற்பகலில் நடந்த ஊடக சந்திப்பில் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அரச தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான சமன் ரத்னப்பிரிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,
“மினுவங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த மேலும் 2000 ஊழியர்களுக்கும் அதேபோல அவர்கள் ஊடாக நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 6000 பேருக்கும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருக்கிறது.
இது தவிர, குறித்த ஆடைத் தொழிற்சாலையிலிருந்த 500 பேர் வரையானவர்கள் தற்போது மாயமாகியுள்ளனர். அவர்களுக்கும் தொற்று இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது“ எனத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment