இன்று முதல் அட்டாளைச்சேனையிலும் கொரோனா தனிமைப்படுத்தம் முகாம் !வீடியோ

றாசிக் நபாயிஸ்-

ட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் மாணவர் விடுதியில் சுமார் 250 படுக்கைகளைக் கொண்ட கொரோனா தனிமைப்படு
த்தல் முகாமாக இது இன்று (12) முதல் செயற்படவுள்ளதாக இப்பணியில் ஈடுபட்டுள்ள இராணூவ உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.


நாட்டில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக, இதற்கான தனிமைப்படுத்தல் முகாம்களை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கல்லூரியின் பயிற்சி ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதனையடுத்து இதனை, சுத்தம் செய்யும் நடவடிக்கையிலும், தொற்று நீக்கம் செய்யும் பணியிலும் இராணுவத்தினர் மும்முரமாக ஈடுபட்டு வருவதனைக் காணக் கூடியதாகவுள்ளது.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியை, கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றுவது தொடர்பிலும், இம்முகாமின் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் ஏனைய சுகாதார செயற்பாடுகள் தொடர்பிலும் கல்விக் கல்லூரி நிருவாகம், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிக்கப்படுகின்றது.

இதேவேளை, அட்டாளைச்சேனை தேசிய கல்வியற்கல்லூரியின் நாலாபுறங்களிலுமுள்ள எல்லைகளில் பொது மக்களின் வசிப்பிடங்கள் காணப்படுவதால், இக்கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் இங்கு அமைவது தொடர்பில் அப்பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :