யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதனுக்கும் எனக்கும் உரையாற்றுவதற்கு நிகழ்ச்சி நிரல் இடப்பட்டிருந்தது.
ஆனால் எங்களுக்கு அங்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என கிராமிய அபிவிருத்தி உள்ளூர் விலங்கு வேளாண்மை மற்றும் சிறு பயிர்ச் செய்கை ஊடக இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
குறித்த நிகழ்வில், வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பேசிய பின்னர் என்னை பேசுமாறு கூறி இருந்தும் அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்பாட்டுக் குழுவினர் எனக்கு வழங்கவில்லை.
நான் அந்தக் கூட்டத்தை விட்டு வெளியில் வந்த போது யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் பலர் என்னிடம் வந்து சொன்னார்கள் உங்களுடைய பேச்சை கேட்பதற்கு நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் நீங்கள் பேசவில்லை என்று அவர்கள் என்னிடம் கவலை தெரிவித்தனர்.
நான் 385 கிலோமீட்டர் தூரம் சென்றிருந்தும் அங்கு எனக்கு பேசுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் ஏற்பாட்டுக் குழுவினருக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளேன்.
அத்துடன், இவ்விடையம் தொடர்பாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளேன் என்றார்.

0 comments :
Post a Comment