J.f.காமிலாபேகம்-
தற்போது நாட்டின் சில பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற ஊரடங்குச் சட்டமானது சட்டரீதியானதாக அமுல்படுத்தப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.
கொழும்பில் இன்று நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனைக்குறிப்பிட்டார்.
குறைந்த பட்சம் முகக்கவசத்தை அணியாமல் இருக்கும் எவருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல்கூட செய்யமுடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
“கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு நிச்சயம் ஊரடங்கு சட்டம் அவசியம். எனினும் அரசினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது சட்டரீதியான வலுவற்றது. எவராவது வழக்கு தாக்கல் செய்தால் அது புரியவரும். இருப்பினும் தற்போது சமூகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியினால் அதனை செய்வதற்கு எவரும் முன்வரமாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.
ReplyReply allForward
0 comments :
Post a Comment