மஹிந்தவை அமெரிக்கா ஏன் நிராகரித்தது? பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை


J.f.காமிலா பேகம்-

லங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க செலயாளர் மைக் பொம்பியோ, பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்காமல் இருந்தமைக்கான காரணத்தை பிரதமரின் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் பிரதானியை மாத்திரம் சந்தித்தால் போதுமானது என்று அமெரிக்கா நினைத்தபடியினாலேயே பிரதமர் மஹிந்தவை பொம்பியோ சந்திக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புக்கு கடந்த 27ஆம் திகதி இரவு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, 28ஆம் திகதி முக்கிய சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன உள்ளிட்டவர்களை சந்தித்த அவர், தனியார் ஊடகமொன்றுக்கு 30 நிமிட நேர்காணல் ஒன்றையும் மைக் பொம்பியோ வழங்கியிருந்தார்.

எனினும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அவர் சந்திக்காமல் சென்றிருந்தமை பாரிய விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டதிலிருந்து ஜனாதிபதி, பிரதமர் என உயர்மட்டத்தினருடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளார் என்று ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இருந்த போதிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்காமல் சென்றதற்கான காரணத்தை பிரதமரின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக உள்ள அநுராதா கே. ஹேரத் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் குறுகியகால விஜயத்தின்போது இலங்கை அரசாங்கத்தின் தலைமைகளில் ஒருவரை மாத்திரம் சந்திப்பது போதுமானதாகக் கருதப்பட்டது. அதனாலேயே, பிரதமர் மஹிந்த ராஜபக்ச பொம்பியோவை சந்திக்கவில்லை என்பதுடன் முன்னரேயே சந்திப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கவுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொம்பியோவின் மிகக்குறுகியகால விஜயத்தின்போது இலங்கை அரசாங்கத்தின் தலைமைகளில் ஒருவரை மாத்திரம் சந்திப்பது போதுமானதாகக் கருதப்பட்டது பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் விளக்கமளித்திருக்கின்றார்.

எவ்வாறாயினும், அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்காமல் சென்றதற்கான காரணமாக, 20ஆவது திருத்தம் மற்றும் அவர் சீனாவுடன் கொண்டுள்ள நட்புறவு என பல விடயங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ReplyForwardஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :