வத்தளையில் 49 பேருக்கு தொற்று- கொழும்பில் தொற்று முழு விபரம்


MI.இர்ஷாத்-

கொ
ழும்பை அண்மித்த வத்தளை பகுதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் 49 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதியாகியிருக்கின்றது.

அந்த நிறுவனத்தில் சுமார் 1000 தொழிலாளர்கள் இருந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் நேற்று மட்டும் 162 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு ஒன்று தொடக்கம் 15 வரையில் 75 நோயாளர்களும் கொழும்பு நகருக்கு வெளியே ஏனைய நோயாளர்களும் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் நவகமுவ பிரதேசத்தில் இனங்காணப்பட்டதோடு இங்கு 29 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்கள்தவிர கிருலப்பனையில் 03, தெஹிவளையில் 01, கடுவலையில் 01, முகத்துவாரத்தில் 04, மட்டக்குளியில் 08, மாதிவெல பகுதியில் 14, அவிசாவளையில் 01, கொட்டாஞ்சேனையில் 03, நுகேகொடையில் 02, ஹோமாகமவில் 02, வெள்ளவத்தையில் 07 மற்றும் மொரட்டுவ பகுதியில் 12 என மொத்தம் 162 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :