அஷ்ரப் ஏ சமத்-
இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றினால் இலங்கையின் சுற்றுலாத்துறையில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை சுற்றுலாத்துறை அதிகார சபையும் இலங்கையில் உள்ள ஜகககிய நாடுகள் அபிவிருத்தித் திட்டமும் இனைந்து சுற்றுலத்துறையில் பாதிக்கப்பட்டுள்ள 67வீதமான பெண்கள் , அப் பெண்களின் கைத்தொழில், கைப்பணி செய்து அவா்களது உற்பத்திகளை வெளிநாட்டு விற்பனை செய்து வருமானம் பெரும் கிராம பெண்களுக்கு நிவாரணம் வழங்க உள்ளது.
இத் திட்டத்திற்காக சிட்டி எனும் சர்வதேச அமைப்பு வாழ்வதார உதவிகளை மேற்படி கைத்தொழில் உற்பத்தி தொழில் செய்யும் பெண்களுக்கு வழங்க உள்ளது. இத் திட்டத்திற்காக 9 மாகாணங்களிலும் இருந்து 900 பெண்கள் தெரிபு செய்யப்பட்டுள்ளனா். மேலும் நாடு முழுவதிலும் 3500 பெண்களுக்கு உதவ உள்ளது.
இதற்காக ஒவ்வொரு கைத்தொழில் பெண்களுக்கு தலா ருபா .50,000 கொவி 19 பாதிப்பு மாணியமாக வழங்கப்படும் யூஎன்.டி.பி யும் இலங்கை சுற்றுலாத்துறை அதிகார சபையும் இணங்கியுள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை தலைவி கிமாரிலி பெர்்ணான்டோ தெரிவித்தாா். இக் கூட்டத்தின் போது யு.என்.டி.பி இலங்கைப் பிரநிதிதி ரொபேட் சுகமும் , சிட்டி அமைப்பின் ரவின் பஸநாயக்கவும் கலந்து கொண்டாா்.
0 comments :
Post a Comment