மேலும் பெண்ணொருவருக்கு கொரோனா!

M.I.இர்ஷாத்-


குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பன்னல எலபடகம பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய பெண்ணொருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் மகன் ஒருவர், மினுவொங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிவதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையிலேயே, குறித்த பெண்ணுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக குருநாகல் போதனா வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, குருநாகல் போதனா வைத்தியசாலையில், கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளுடன் 20 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவர்களில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வைத்தியர் சந்தன கெந்தன்கமுவ குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :