நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிப்பு.

பைஷல் இஸ்மாயில் -

நாட்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த் தொற்றுக் கிருமியை எதிர்கொள்ளும் Safoof Josand (Anti Viral Choorana) யூனானி மருந்துப் பொதிகள் வழங்கி வைக்கும் நடவடிக்கையை கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் எம்.ஏ.நபிலினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான Safoof Josand (Anti Viral Choorana) நோயெதிர்ப்பு பானத்தை நேற்றைய தினம் (22) பிரதேச செயலாளர் எஸ்.எல்.ஹனிபாவிடம் கையளித்து வைத்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சாரின் பணிப்புரைக்கமைவாக சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி ஆர்.ஸ்ரீதரின் வழிகாட்டலின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனின் நெறிப்படுத்தலில் அக்கரைப்பற்று முகம்மதியாபுரம் மருந்து உற்பத்திப் பிரிவில் Safoof Josand (Anti Viral Choorana) யூனானி மருந்துப் பொதிகள் விஷேடமாக தயாரிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல அரச நிறுவனங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கும் ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இதனை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :