பொதுவில் பொது நூலக வாசகர்கள் விசனம் தெரிவிப்பு..

அபூ அதிய்யா-


கொரோன வைரஸின் இரண்டாவது பரம்பலால் அரசு தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் செயல் திட்டமாக, அரச மற்றும் தனியார் உள்ளிட்ட கல்வி நிறுவங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இச்சூழ்நிலையில் அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றிய சுற்று நிருபத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் சுகாதார ஒழுங்கு விதிகளின் அடிப்படையில், ஒவ்வொரு அரச மற்றும் தனியார் காரியாலயங்களிலும், கைகளை சுத்தம் செய்வதற்கான வசதிகள், கிருமியை அழிக்கும் திரவங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன், வருகை தருவோரின் உடல் வெப்ப நிலையை அளவீடு செய்து, அவர்களின் பெயர்,அடையாள அட்டை இலக்கம், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் உள்ளடங்கிய விபரங்களை தினவரவுப் பதிவேட்டில் பதிவு செய்த பின்னரே, பயனாளியை உள்நுழைய அனுமதிக்க வேண்டும்.

மேட்குறித்த நடைமுறை, பொத்துவில் பிரேதசத்தில் உள்ள தனியார் மற்றும் அரச நிறுவனர்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுவில் பொது வாசிக சாலையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதனால் தமக்கு, சுகாதார அமைச்சின் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்ற முடியாதுள்ளதாக வாசகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மேலும் தாம் கொரோனா தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொளும் வைகையில், சுகாதார அமைச்சின் மேட்குறித்த வசதிகளை ஏட்படுத்துமாறும் தவிசாளர் கேட்டுக்கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :