இலங்கையில் 8000ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

J.F.காமிலா பேகம்-

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 280 பேர் இன்று அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 15 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 265 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 152 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 678 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கொழும்பு பொரளை லேடி றிட்ஜ்வே வைத்தியசாலையில் குழந்தைகள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 குழந்தைகள் மற்றும் தாய்மார் மூவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பேலியகொடை மீன்சந்தை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய நிலையில் இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் 16 ஆவது உயிரிழப்பு நேற்றைய தினம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 130 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 4 ஆயிரத்து 203 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாடு முழுவதும் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக இதுவரையான காலப்பகுதியில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 836 பி. சி. ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :